வரவணையில் பொது வழிப்பாதையை மறித்து காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

ஒரு மணி நேரம் கரூர் - வையம்பட்டி சாலை போக்குவரத்து பாதிப்பு. கடவூர் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்;

Update: 2025-11-16 15:48 GMT
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் அருகே வரவணையில் இருந்து கொள்ளுதண்ணிப்பட்டி செல்லும் மண் சாலையில் விவசாய தோட்டத்துடன் வீடு கட்டி சுமார் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் அங்காளம்மன், கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. வரவணை அரசு குளம் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதனால் சாலையின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் இரண்டு பெருமாள் கோவில்களை கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.இக்கோவில்கள் இரண்டையும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இக்கோவில்கள்களை சுற்றி பொது வழிப்பாதையை மறித்து காம்பவுண்ட் சுவர் எழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளே உள்ள கோவில் வழிப்பாட்டு பொதுமக்கள், விவசாயிகள் பொது வழி பாதையை மறைத்து காம்பவுண்ட் சுவர் கட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் கோவில்களுக்கு ஆதரவாக இது இந்து சமய அறநிலைத்துறையின் கோவிலுக்கு சொந்தமான இடம் காம்பவுண்ட் சுவர் கட்டப்படும் என்றும், வழிப்பாதை தர முடியாது என்று இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கடிதம் மூலம் பதில் கூறியதாதல் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கரூர் - வையம்பட்டி சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் மற்றும் கடவூர் வட்டாட்சியர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் மூலம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் 1 மணி நேரப் போராட்டத்தை கைவிட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறிய போது:- பரம்பரை பரம்பரையாக பல தலைமுறைகளாக தாங்கள் இந்த பாதை வழியாக கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்த நிலையில் குறிப்பிட்ட சமூகத்திரின் கோவிலுக்காக காம்பவுண்ட் சுவர் பொது வழி பாதையை மறித்து கட்டப்பட்டால் இப்பகுதியில் விவசாய தோட்டத்திற்கு செல்வர்கள் வேறு எந்த பாதையில் செல்ல முடியும் என்றும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டு ஊர் பொதுமக்கள் கருப்பண்ண சுவாமி, அங்காளம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளனர் என்றும் வேதனை தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள், அரசு குளம் மற்றும் 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதற்கு செல்வதற்கு வழியில்லை என குற்றம் சாட்டினர்.

Similar News