சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் தகவல்களின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படுவதில்லை.கரூர் எம்பி ஜோதிமணி பேட்டி.

சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் தகவல்களின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படுவதில்லை.கரூர் எம்பி ஜோதிமணி பேட்டி.;

Update: 2025-11-18 14:40 GMT
சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் தகவல்களின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படுவதில்லை.கரூர் எம்பி ஜோதிமணி பேட்டி. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இன்று அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எஸ் ஐ ஆர் எனப்படும் வாக்காளர் தீவிர திருத்தம் குறித்து சந்தேகம் தெரிவித்தார். எஸ் ஐ ஆர் தீவிர திருத்தம் நடைபெறும் மாநிலங்களில் அஸ்சாமில் மட்டும் எஸ் ஆர் திருத்தம் (சாதாரண வாக்காளர் திருத்தம் ) நடைபெறுவது ஏன்?என கேள்வி எழுப்பிய அவர் இது எஸ் ஐ ஆர் திருத்தம் அல்ல குடியுரிமை திருத்தம் என விளக்கம் அளித்து குடியுரிமை திருத்தம் செய்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அது உள்துறைக்கு மட்டுமே உள்ளது என தெளிவுபடுத்தினார். அப்போது செய்தியாளர் ஒருவர் தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்து சமூக வலைதளத்தில் பரவி வரும் செய்திகள் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் கட்சிக்கு விஜய் புதியவர் அல்ல எனவும் கடந்த 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்வது தொடர்பாக ராகுல் காந்தியிடம் விஜய் பேசி உள்ளார் எனவும், ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல்களால் அது நடைபெறாமல் போனது எனவும் கூறினார். மேலும் கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து தலைவர்கள் அது குறித்து பேசுவது இயல்பான ஒன்றுதான் என்றும் அதுவே தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம் என்று சொல்லிவிட முடியாது என்றும் காங்கிரஸ் கட்சி தற்போதும் திமுக கூட்டணியில் உள்ளது என்று கூறினார். எனவே சமூக வலைத்தளத்தில் பரவும் செய்திகளின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்.

Similar News