நாமக்கல் அரசு ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற தேசிய இயற்கை மருத்துவ தின பேரணி.

தேசிய இயற்கை தினத்தை முன்னிட்டு நாமக்கல் அரசு ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2025-11-18 15:28 GMT
இந்தப் பேரணியை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மரு.சாந்தா அருள்மொழி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியை அரசு ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை ஆகியோர் இணைந்து தேசிய இயற்கை தின விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு இயற்கை மருத்துவர் செந்தில்குமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஷ் கண்ணன்,ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையின் மருத்துவர் விஜயலட்சுமி, சபிதா மற்றும்,ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மாதையன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்து இப்பேரணியை நிறைவு செய்தனர்

Similar News