ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அபகரித்ததை கண்டித்து ஆரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

போளூர் வெண்மணி கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளை தனியார் நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து ஆரணி அண்ணாசிலை அருகில் அதிகாரிகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-11-20 02:19 GMT
ஆரணி, போளூர் வெண்மணி கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளை தனியார் நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து ஆரணி அண்ணாசிலை அருகில் அதிகாரிகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போளூர் வட்டம், வெண்மணி கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு என சுமார் 100 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதை தனியார் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்க தீர்ப்பு வந்தும் அதிகாரிகள் இந்த இடத்தை மீட்டுத்தரவில்லை. இது குறித்து ஆரணி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர் தெள்ளூர் சேகர் தலைமையில் ஆக்கிரமிப்பை அகற்றாத தனிநபர்களை கண்டித்தும், இதற்கு உதவி புரியும் அதிகாரிகளையும் கண்டித்தும் ஆரணி அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்சிஎஸ்டி பிரிவு மாவட்டதுணைதலைவர் போளூர் ஜெ.சுதாகர் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள் ஆர்.நித்யனந்தம், கேளூர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் அதிகாரிகளையும், தனிநபர்களையும் கண்டித்து கோஷமிட்டனர். முடிவில் சிறுபான்மை பிரிவு மாவட்டதலைவர் தாவூத் ஷெரீப் நன்றி கூறினார்.

Similar News