சமூக சேவைக்காக முனைவர் பட்டம்.

குமாரபாளையத்தை சேர்ந்த நபருக்கு சமூக சேவைக்கான மருத்துவ பட்டம் வழங்கப்பட்டது;

Update: 2025-11-20 16:29 GMT
குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி இன் சார்பில் பாண்டிச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் பல நபர்கள் பங்கு பெற்று கௌரவ டாக்டர் பட்டம் பெற்றனர். இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அரிமா.முரளி அவர்களுக்கு கீழ்க்கண்ட சேவையை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் சேவா ரத்தினா விருது வழங்கப்பட்டது கடந்த 30ஆண்டுகளாக அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆதரவற்ற வயதானவர்கள் தன்னால் முடிந்த பல உதவிகளை மருத்துவ செலவு அறுவை சிகிச்சை பரிந்துரை செய்யப்பட்ட மருத்துவர்களிடம் கட்டணத்தை குறைத்துள்ளார் உணவு உடை மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவன் இறந்த பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சுய தொழில் செய்ய பல உதவிகளை செய்துள்ளார் பெண்களின் வளர்ச்சிக்காக மகளிர் குழுக்கள் சிறப்பாக செயல்படவும் அரசு வழங்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அரசிடம் இருந்து வாங்கி கொடுத்துள்ளார் மாணவர்களின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு நல்லொழுக்கம் கல்வி விளையாட்டு ஊக்குவித்து பல சமூக சேவை தனிப்பட்ட முறையில் செய்து வந்தார் அரிமா சங்கத்துடன் இணைந்து மற்றும் 2 முறை தலைவராகவும் மற்றும் இதர பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் பல மருத்துவ முகங்கள் மற்றும் ரத்ததான முகாம் கண் சிகிச்சை முகம் பெண்களுக்கு புற்று நோய் கண்டறியும் முகம் இருதயம் சர்க்கரை நுரையீரல் சம்பந்தமான மருத்துவ முகாம் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் நடத்தி பல நபர்களும் இதன் மூலம் பலன் அடைந்துள்ளனர் முரளியின் சேவையை பாராட்டி கௌரவர் மருத்துவர் பட்டம் வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Similar News