நவோதயா பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு உயர் கல்வியான கல்லூரி கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதல் நிகச்சி நடைபெற்றது.;

Update: 2025-11-21 13:53 GMT
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி சேர்ப்பதற்காக கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை தேடி சிரமப்படுவதை எளிமையாக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களின் பொறுப்பு பேராசிரியர்களையும், கல்லூரி போராசிரியர்களையும் நேரடியாக அழைத்து வந்து மாணவ, மாணவியருடன், பெற்றோருடன் கலந்துரையாடினர். நாமக்கல் மாவட்டத்திலேயே இதுபோன்ற வழிகாட்டுதல் நிகழ்சியை நமது நவோதயா அகாடமி பள்ளிதான் முதன் முறையாக நடத்தியது என்பது பெருமைக்குரியது. நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு உயர் கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி சிறந்த கல்வியாளர்களை அழைத்து வந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த கல்வியாண்டில் உலகத்தரம் வாய்ந்த 21 (இருபத்தி ஒன்று) கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி பல்கலைக் கழகங்களை அழைத்து வந்து நேரடியாக மாணவ. மாணவியருடன் கலந்துரையாடினர். அமிர்தா, கோவை, பிஎஸ்ஜி, விஐடி, அப்பல்லோ, கற்பகம், எட்வைஸ், வோக்ஷன், nஐயின், கேபிஆர் பொறியில் கல்லூரி, எல்பியு பல்கலைக்கழகம், குமரகுருகல்லூரி, இந்தியன் இன்ஸ்டியுட் ஆப் ஆர்ட், டிசைன் கல்லூரி, எஸ்ஆர் பல்கலைக்கழகம், ஐசிஎப்ஏஐ பல்கலைக்கழகம், டிஜே அகாடமி, வித்யாசிலிப்பல்கலைகழகம,; தயானந்த பல்கலைக்கழகம் ூபோன்ற கல்விநிறுவனங்களின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு அந்தந்த கல்வி நிறுவனத்தின் சேர்க்கை, தகுதிபாடுகள், படிப்புகள் எந்தெந்த படிப்பிற்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் என்பது குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் நேரடியாக அமர்ந்து கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். மாணவர்களுக்கு கல்விக்கான கல்வி உதவித்தொகை பெறுவது வேலைவாய்பப்பு உத்திரவாதம், வெளிநாடுகளில் சென்று எவ்வாறு படிக்கலாம், என்பது குறித்து அந்தந்த கல்வி நிறுவன பொறுப்பாளர்கள் விளக்காமாக கூறினார்கள்.முன்னதாக இந்த உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்விற்கு பள்ளியின் செயலாளர் தனபால் அவர்கள் தலைமை ஏற்றுநடத்தினார். பள்ளியின் பொருளாளர் கா.தேனருவி அவர்கள் பொறுப்பாளர்கள் அனைவரையும் வரவேற்று மாணவ, மாணவியர்கள் இந்த நிகழ்சியில் கலந்துகொண்ட சிறந்த முறையில் பயன் பெறவேண்டும் என்று வாழ்த்தினார். பள்ளி முதல்வர் நன்றியுரை கூற மாலை 4.00 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது. பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள் தங்களுடைய சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களைப் பெற்ற மனநிறைவுடன் சென்றனர். நவோதயா பள்ளியின் கல்வி வளர்ச்சியில் இந்நிகழ்ச்சி ஒரு மைல் கல்லாக இருந்தது.

Similar News