நாமக்கல்லில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்!
நாமக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
நாமக்கல்லில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு,18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.களப் பணியாளர்களின் பணிச் சுமையை போக்க வேண்டும், பணிகளை முறைபடுத்த வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறு வட்ட அளவர் பதவிகளை மீளப்பெற வேண்டும், ஒப்பந்த முறை பணி நியமனத்தை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்,நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வரவேற்பு உரை மாவட்ட இணை செயலாளர் கபிலன் பேசினார்.அதனைத் தொடர்ந்து போராட்ட விளக்க உரையை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அருண் மற்றும் துணைத் தலைவர் சுபாஷ்வெங்கட் ஆகியோர் விளக்கி பேசினர்.நாமக்கல் கோட்டத் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் திருச்செங்கோடு கோட்டத் தலைவர் ராஜா விரிவாக பேசினார்கள்,நாமக்கல் கோட்ட செயலாளர் பாரதி மற்றும் திருச்செங்கோடு கோட்ட செயலாளர் பூங்கோதை நன்றி கூறினர்