குண்ணத்தூரில் மாபெரு்ம் கன்று விடும் திருவிழா.
ஆரணி அடுத்த குண்ணத்தூரில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் தீபத்திருவிழா முன்னிட்டு மாபெரும் சிறுங்காளை விடும் திருவிழா நடைபெற்றதில் சீறிப்பாய்ந்த கன்றுகளை அடக்கிய வீரர்கள்;
ஆரணி அடுத்த குண்ணத்தூரில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் தீபத்திருவிழா முன்னிட்டு மாபெரும் கன்று விடும் திருவிழா நடைபெற்றது. ஆரணி அடுத்த குண்ணத்தூரில் நடைபெற்ற கன்று விடும் திருவிழா நடைபெற்றதில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம்,விழப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 500 சிறுங்காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து சென்றது. இவ்விழாவினை ஆரணி திமுக ஒன்றிய செயலாளர் துரைமாமது கலந்துகொண்டு காளை வீரர்களை உற்சாகப்படுத்தினார். உடன் ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்டதுணை செயலாளர் ஜெயராணிரவி, நகரமன்றதலைவர் ஏ.சி.மணி, ஒன்றியசெயலாளர்கள் மாமது, மோகன், சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.30ஆயிரம் பரிசு அளிக்கப்பட்டது. 2ம் பரிசாக ரூ.25ஆயிரம், 3வது பரிசாக ரூ.20ஆயிரம், 4ம் பரிசு ரூ.15ஆயிரம், 5வது பரிசாக ரூ.10ஆயிரம், 6 வது பரிசாக ரூ.9ஆயிரம், 7வது பரிசாக ரூ.8 ஆயிரம் மற்றும் 80 காளை உரிமையாளர்ளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் பாதுகாப்பு பணிக்கு ஆரணி இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையில் எஸ்.ஐ அருண்குமார் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மேலும் ஆரணி சுகாதாரத்துறையினரும் யாரேனும் காயம் அடைந்தால் முதலுதவி செய்ய தயாராக இருந்தனர். ஏற்பாடுகளை குண்ணத்தூர் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.