பெண் மாயம் போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் பெண் மாயமானதால், போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.;
குமாரபாளையம் சத்யாபுரி பகுதியில் வசிப்பவர் மகேஸ்வரி, 39. இவருக்கு கண்ணில் பார்வை குறைபாடு இருந்து வந்துள்ளது. இதற்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், பல மாதங்களாக சிகிச்சை பெற்றும் பார்வை குறைபாடு தீரவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நவ. 22 காலை 06:00 மணியளவில் வெளியில் சென்று விட்டு வருவதாக தன் கணவர் கோபாலகிருஷ்ணன் வசம் கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கோபாலகிருஷ்ணன் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மகேஸ்வரியை போலீசார் தேடி வருகின்றனர்.