ஆரணி அருகே அடிப்படை வசதிகளை கேட்டு சாலை மறியல்
ஆரணி அருகே அடிப்படை வசதிகளை கேட்டு சாலை மறியல் காவல் துறையினர் அராஜகத்தில் ஈடுபடுவதாக பெண்கள் குற்றச்சாட்டு..;
ஆரணி அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வந்தவாசி_ஆரணி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதியில் மேல்நிலை நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த நிலையில் அங்கு வந்த ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம், உதவி ஆய்வாளர் அருண் மற்றும் போலீசார் அடிப்படை வசதிகளை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைகளை பிடித்து இழுத்து தள்ளி அப்புறப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பெண்கள் தண்ணீர் இல்லாமல் உயிர் போகும் சூழ்நிலையில் உள்ளோம் தங்களுக்கு உதவி செய்யாமல் இதுபோன்று அராஜகத்தில் ஈடுபடுகிறீர்களே என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் அடிப்படை வசதிகளை கேட்டு ரோட்டில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடக்கூடிய அவல நிலையில் தமிழகம் தள்ளப்பட்டு விட்டதாக மக்கள் வேதனை....