ராமநாதபுரம் கனமழை
ராமேஸ்வரம் ராமநாத கோவிலுக்குள் புகுந்த மழை நீர் பக்தர்கள் அவதி;
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கனமழை ராமநாதசாமி திருக்கோயில் உள்ளே புகுந்த மழை நீர் கோயில் நுழைவாயில் முன்பாக குளம் போல் தேங்கி கிடைக்கும் மழை நீர் பக்தர்கள் அவதி வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலு பெற்று தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது இந்த நிலையில் ராமேஸ்வர தீவு பகுதிகளில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது இந்த நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவில் உள்ளே மழைநீர் புகுந்துள்ள மட்டுமில்லாமல் கோயில் நுழைவு வாசல் முன்பாக மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கின்றது இதனால் ராமநாதசாமி திருக்கோயிலுக்கு பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இதற்கு சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோவில் முன்பாக தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.