வடமாநில வாலிபர் கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வடமாநில வாலிபர் கொலை வழக்கில் மூன்று பேருக்கு சிறை தண்டனை, பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு;
வடமாநில வாலிபர் கொலை வழக்கில் மூன்று பேருக்கு சிறை தண்டனை, பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப்(30), இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம், மவுண்ட் - பூந்தமல்லி சாலையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் முகம் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி போலீசார் கொலை செய்யப்பட்ட பிரதிப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காட்டுப்பாக்கத்தில் தங்கி அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ஹரிகுமார்(35), மற்றும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ராஜுன்கின்கு(25), அன்சாரி(24), ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் நண்பர்களான இவர்கள் அனைவரும் காட்டுப்பாக்கத்தில் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கமாம். அப்போது குடி போதையில் மாடியில் இருந்து கீழே தள்ளியதில் பிரதீப் இறந்து போனதாகவும் பின்பு அங்கிருந்த குப்பைகளுக்கு இடையே வைத்து பிரதீப் உடலை எரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரை பூந்தமல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3 ல் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார். வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயகுமார் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். இதில் மூன்று பேர் மீதும் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஹரிகுமாருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ராஜுன்கின்கு, அன்சாரி ஆகியோருக்கு தலா இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து மூன்று பேரும் போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.