ராமநாதபுரம் அஞ்சல் துறையினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வணிகம் என்ற பெயரில் டார்கெட் டார்ச்சர் கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் அரண்மனை பகுதியில் உள்ள அஞ்சல் துறை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் காரிச்சாமி தலைமை வகித்தார், கோட்டச் செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார் அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து முன்னாள் மாநில செயலாளர் ஜான் பிரிட்டோ சிறப்புரை ஆற்றினார் - அப்போது பேசுகையில் மத்திய ஊழியர்களின் எட்டாவது ஊதியக் குழுவில் கிராமிய அஞ்சல் ஊழியர்களையும் இணைக்க வேண்டும் வணிகம் என்ற பெயரில் டார்கெட் டார்ச்சர் செய்வதை நிறுத்த வேண்டும் சிறு தவறுகளுக்கு கூட அஞ்சல் ஊழியர்களுக்கு பெரிய தண்டனை வழங்குதல் கைவிட வேண்டும் அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் மகா தேவையாவை உடனே பணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார் இவைகளை உடனே அமுல்படுத்தி ஊழியர்களின் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர், அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகி பாஸ்கரன் நன்றி கூறினார்