கிருஷ்ணராயபுரம் பகுதியில் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா கோலாகலம்

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டார்;

Update: 2025-11-27 14:01 GMT
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 49 வது பிறந்தநாள் விழாவையொட்டி கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது முதலாவதாக இன்று காலை கிருஷ்ணராயபுரம் பேரூர் கழகம் சார்பில் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தத்திலும்,பழைய ஜெயங்கொண்டம் பேரூர் கழகம் சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது அதன் பின்னர் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம் மேட்டு மகாதானபுரம் மற்றும் மாயனூர் பேருந்து நிறுத்தத்தில் இரு வண்ண கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும்,மாயனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்பு, நோட்டு,பேனா,பென்சில் மற்றும் பரிட்சை அட்டை வழங்கியும் தாந்தோணி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் வெள்ளியணை ஶ்ரீ ராகவேந்திர குழந்தைகள் நல காப்பகத்தில் மதிய உணவு வழங்கியும் மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் இதில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, ஒன்றிய அவைத்தலைவர் நல்லுசாமி,தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன்,கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் சசிகுமார்,பழைய ஜெயங்கொண்டம் பேரூர் செயலாளர் மோகன்ராஜ்,பேரூராட்சி தலைவர் சௌந்தரபிரியா,பேரூராட்சி தலைவர் சேதுபதி மகாலிங்கம்,மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் அம்பிகாபதி,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பரமசிவம்,இளைஞர் அணி அமைப்பாளர் மோகன்குமார்,பெரியசாமி மாவட்ட வார்டு கவுன்சிலர்கள்,வார்டு செயலாளர்கள்,மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Similar News