ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் பத்திரிக்கையாளர் சந்திப்பு
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவராக 11 பேர் விண்ணப்பம் மேலிட பார்வையாளர் ஜெய்பிரகாஷ் ஹெக்டே தெரிவித்தார்;
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு 11 பேர் மனு அளித்துள்ளதாக மேலிட பார்வையாளர் முன்னாள் அமைச்சர் ஜெய்பிரகாஷ் ஹெக்டே தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக இருந்த சின்னத்துரை அப்துல்லா ராஜினாம செய்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக புதிய மாவட்ட தலைவர் தேர்வு செய்யப்படாமல் இருந்தது. இதற்கு பதிலாக மாவட்ட பொறுப்பாளர்கள் நிமிக்கப்பட்டனர். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வு செய் வதற்கான எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் படி மேலிட பார்வையாளர் முன்னாள் அமைச்சர் ஜெய்பிரகாஷ் ஹெட்டே நியமிக்கப்பட்டார். இவர் வியாழக்கிழமை ராமநாதபுரம் வருகை தந்தார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்து நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முழுவதிலும் மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது நான் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய வந்துள்ளேன். இதில், ஒவ்வொரு தொகுதி வாரியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருக்காக 11 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் குறித்த ஆய்வு செய்து காங்கிரஸ் கமிட்டி தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு மாவட்டத்தலைவர் தோவு செய்யப்பட உள்ளதாகவும். கட்சியில் கீழ் மட்டம் வரை ஆய்வு செய்ய உள்ளோம் என்றார். இதில், மாவட்ட பொறுப்பாளர் அடையாளர் பாஸ்கார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரும் மாவட்ட பொருளாளர் ராஜராம் பண்டியன்,நிர்வாகிகள் கிருஷ்ணராஜ்,அப்துல் வாஹீப்,வட்டார தலைவர்கள் கார்குடி சேகர்,சேதுபாண்டி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.