தி.மு.க. முன்னாள் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஜே.கே.கே. சுந்தரம் செட்டியார் மனைவியை காண முதல்வர் ஸ்டாலின் வருகை

தி.மு.க. முன்னாள் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் குமாரபாளையம் ஜே.கே.கே. சுந்தரம் மனைவியின் உடல்நலம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார்.;

Update: 2025-11-28 14:04 GMT
குமாரபாளையத்தில் திமுக-வின் மூத்த முன்னோடி ஜே.கே.கே. சுந்தரம் குடும்பத்தினரை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். . குமாரபாளையம் பகுதியைச் சார்ந்த J.K.K. சுந்தரம் என்பவர் தி.மு.க. தொடங்கிய பொழுது பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். மேலும், இவர் ஜவுளி வர்த்தகத்தில் இலங்கையில் ஈடுபட்டிருந்தார். தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொழுது அவருக்கான பயணத்திற்கு சுந்தரத்தின் காரை பயன்படுத்தி உள்ளார். இதன்காரணமாக தி.மு.க. வில் உள்ள முதல் கட்ட தலைவர்கள் அனைவரும் இவருக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளனர். தி.மு.க. தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, இவரின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். அவர், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொழுது சேலம், நாமக்கல், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சார பயணங்கள் முடித்துக்கொண்டு குமாரபாளையத்தில் சுந்தரம் இல்லத்தில் வந்துதான் ஓய்வு எடுப்பார். அதேபோல் தற்போதைய திமுக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெரும்பாலும் நாமக்கல், சேலம் மாவட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் கொள்ளும் பொழுது இவரது இல்லத்தில் தங்குவது வழக்கம். தி.மு.க.வின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராக இருந்த சுந்தரம், கடந்த 2014-ம் ஆண்டு உயிரிழந்ததை அடுத்து தி.மு.க.வின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராக அவரது மகன் மாணிக்கம் தேர்வு செய்யப்பட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின், மாணிக்கத்தின் பால்ய கால நண்பர் என்பதால், வயது மூப்பின் காரணமாக, உடல்நிலை சரியில்லாத, மாணிக்கத்தின் தாயார் ராஜம்மாளை, .குமாரபாளையம் அவரது இல்லத்தில் சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார். ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஸ்டாலின் குமாரபாளையம் வந்தார். நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி, எம்.பி. இராஜேஷ்குமார், நாமக்கல் கலெக்டர் துர்கா நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News