அனைத்து கட்சியினர் சார்பில் அரசாணையை மாற்ற ஸ்டாலின் வசம் மனு
அனைத்து கட்சியினர் சார்பில் குமாரபாளையம் தாலுக்கா சம்பந்தமான அரசாணையை மாற்ற ஸ்டாலின் வசம் மனு கொடுக்கப்பட்டது.;
அனைத்து கட்சியினர் சார்பில் குமாரபாளையம் தாலுக்கா சம்பந்தமான அரசாணையை மாற்ற ஸ்டாலின் வசம் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து குமாரபாளையம் வட்டம் 2016 ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது அப்பொழுது அரசாணை வெளியிடும் பொழுது பள்ளிபாளையத்தை தலைமை இடமாக கொண்ட குமாரபாளையம் வட்டம் என வெளியிடப்பட்டதால், குமாரபாளையம் பகுதிக்கு கிடைக்க வேண்டிய முன் உரிமைகள் அனைத்தும் கிடைக்காமல் புறக்கணிக்கப்படுகிறது. குமாரபாளையம் நகராட்சி பகுதியில் மற்றும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். மேலும் முக்கிய தொழில் நகரமாக விளங்கக்கூடிய குமாரபாளையம் பகுதியில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டம் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைக்கு வந்து செல்கின்றனர். குமாரபாளையத்தின் கிளைப் பகுதியான பள்ளி பாளையத்தை தலைமை இடமாக அறிவித்துள்ளதால், குமாரபாளையம் பகுதி பொதுமக்களை பெரிதும் ஏமாற்றமடைய செய்துள்ளது. குமாரபாளையம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு சுமார் 70க்கும் மேற்பட்ட வருடங்களை கடந்து விட்டது அதன் பிறகு குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. குமாரபாளையம் வட்டம் என தமிழக அரசும் அறிவித்தது. குமாரபாளையம் நகரின் மையப் பகுதியிலேயே வட்டாட்சியர் அலுவலகம், குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், தீயணைப்பு நிலையம் போக்குவரத்துக் காவல்துறை அலுவலகம் அனைத்தும் அமைந்துள்ளது ஆனால் காவல் உட்கோட்ட அலுவலகம் மட்டும் பள்ளிபாளையம் என அறிவிக்கப்பட்டு உள்ளது இந்த அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்பதை அனைத்து கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் எனவே பள்ளிபாளையத்தை தலைமை இடமாகக் கொண்ட குமாரபாளையம் வட்டம் என்பதனை திருத்தம் செய்து, குமாரபாளையத்தை தலைமை இடமாகக் கொண்ட குமாரபாளையம் வட்டம் என அறிவிக்க குமாரபாளையம் பகுதி மக்கள் சார்பாகவும் அனைத்து கட்சியினர் மற்றும் பொது நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.