ராமநாதபுரம் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது

டிட்வா புயல் எதிரொலி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-11-29 09:05 GMT
ராமநாதபுரம் மாவட்டம் வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தனுஷ்கோடி பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருவதுடன் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதால் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவின் பேரில் தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகள் இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் தனுஷ்கோடி செல்வதற்காக வந்த வாகனங்கள் அனைத்தும் புதுரோடு பகுதியில் உள்ள காவல் நிலைய சோதனை சாவடியில் நிறுத்தி திருப்பி அனுப்பி விடப்பட்டு வருகிறது

Similar News