கரூரில்,வண்ண வண்ண உடை அணிந்து கையில் வாள் ஏந்தி ஆண்டு விளையாட்டு விழாவில் அசத்திய பள்ளி மாணாக்கர்கள்.
கரூரில்,வண்ண வண்ண உடை அணிந்து கையில் வாள் ஏந்தி ஆண்டு விளையாட்டு விழாவில் அசத்திய பள்ளி மாணாக்கர்கள்.;
கரூரில்,வண்ண வண்ண உடை அணிந்து கையில் வாள் ஏந்தி ஆண்டு விளையாட்டு விழாவில் அசத்திய பள்ளி மாணாக்கர்கள். கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று 43 வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் பள்ளி நிர்வாகி பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பாண்டியன்,முதல்வர் சாகுல் அமீது , திருச்சி நேஷனல் கல்லூரியின் விளையாட்டுத்துறை இயக்குனர் டாக்டர் பிரசன்ன பாலாஜி, அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு துறை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மாணவ - மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் பல வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் பள்ளி மாணாக்கர்கள் வண்ண வண்ண உடை அணிந்து கையில் வாள் ஏந்தி இசைக்க்கபட்ட பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர். மேலும் மாணவர்கள் நாட்டுப்புற மற்றும் திரைப்பட பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளியின் தலைமை ஆசிரியை நளினிபிரியா நன்றி உரை நிகழ்த்தினார்.