கும்மிடிப்பூண்டி அருகே பெண் பூ வியாபாரி கல்லால் தலை மற்றும் உடலை நசுக்கி கொலை
பூ விற்றுவிட்டு நடந்து வந்த தனம் என்ற பெண்ணை மாந்தோப்பில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சின்ன நத்தம் என்ற கிராமத்தில் கிராமத்தைச் சேர்ந்த தயாளன் 58 விவசாயக் கூலி தொழிலாளி இவரது இரண்டாவது மனைவி தனம் 44 இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் தனம் பூ வியாபாரம் செய்து வந்த நிலையில் தினம் தோறும் நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட பகுதிக்கு நடந்து சென்று பூ வியாபாரம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார் இந்த நிலையில் நேற்று மாலை தனம் சுண்ணாம்பு குளம் பகுதிக்கு பூ வியாபாரம் செய்ய சென்றவர் இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடினர் இதனிடையே சாலையோரம் உள்ள மாந்தோப்பில் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்து வந்த ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான போலீசார் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர் அப்போது சின்ன நத்தம் கிராம மக்கள் கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அவர்களை சமரசம் செய்த ஆரம்பாக்கம் போலீசார் கொலை செய்யப்பட்ட தனத்தின் உடலை இரவோடு இரவாக வழக்கமாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு அனுப்புவதற்கு பதிலாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர் பெண் பூ வியாபாரி படுகொலை தலை முகம் கல்லால் நசுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் பூ வியாபாரி தனத்தை கொலை செய்த வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞரை ஆரம்பாக்கம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பூ வியாபாரம் செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய தனத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பிற்கு தூக்கிச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கொலை செய்ததாக கைதாகி உள்ள தினேஷ்குமார் என்ற இளைஞர் தெரிவித்துள்ளார் தான் குடிபோதையில் பூ விற்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற தனத்தை மாந்தோப்பிற்கு இழுத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில் வேறு யாராவது கொலையில் துணையாக தினேஷ் குமாருக்கு இருந்தார்களா என்ற கோணத்திலும் ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். ஆரம்பாக்கம் மாந்தோப்பில் எட்டு வயது சிறுமி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் தற்போது பூ விற்றுவிட்டு நடந்து வந்த தனம் என்ற பெண்ணை மாந்தோப்பில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கல்லை போட்டு தலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது