அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்.

மட்டபிறையூரில் அதிமுக சார்பில் 42 வது வாரம் திண்ணை பிரச்சாரம்.;

Update: 2025-11-29 15:42 GMT
ஆரணி, சேத்துப்பட்டு அடுத்த மட்டபிறையூர் கிராமத்தில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அம்மா பேரவை சார்பில் திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியில் சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரி பாபு தலைமை தாங்கினார். 42வது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மட்டபிறையூர் வீதியில் வீதி வீதியாக நடந்து சென்றும், காய்கறி கடை, பழ கடை, மளிகை கடை, பேருந்து நிறுத்த பயணிகள் போன்ற இடங்களில் மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் சேத்துப்பட்டு ஒன்றியகழக செயலாளர் ஸ்ரீதர், ஒன்றியகழக செயலாளர்கள் வீரபத்திரன், விமல், ராகவன், விவசாயஅணி மாநில துணைசெயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செந்தில்குமார் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பரத், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர்கள் அகஸ்டின், ராஜேந்திரன், சுரேஷ், நகரமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சுதாகுமார், விநாயகம், நிர்வாகிகள் மில் சரவணன், சேட்டு மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News