கரூரில் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப்போட்டியில் மாணவிகள் உற்சாகம்.

கரூரில் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப்போட்டியில் மாணவிகள் உற்சாகம்.;

Update: 2025-11-30 09:34 GMT
கரூரில் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப்போட்டியில் மாணவிகள் உற்சாகம். கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகள போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்திய தடகள சம்மேளனம் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து மத்திய அரசின் ஆதரவுடன் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திறமையான பெண் தடகள வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களை உலக அளவிலும் ஒலிம்பிக் அளவிலும் பங்கேற்கச் செய்து வெற்றி பெறுவதற்கான அனைத்து விதமான உதவிகள் அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அஸ்மிதா என்ற பெயரில் 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட பெண் வீராங்கனைகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளை இன்று கரூர் மாவட்ட தடகள சங்க தலைவர் செல்வம் செயலாளர் பெருமாள் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பெண் சிறுமிகளுக்கு ட்ரெய்லத்தான் பிரிவு, ABC மற்றும் கிட்ஸ் ஜாவ்லின் என நான்கு போட்டிகளும் 16 வயதிற்குட்பட்ட பெண் சிறுமிகளுக்கு 60 மீட்டர்,600 மீட்டர், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டுஎறிதல்,குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் என 7-வகையான போட்டிகள் நடைபெற்றது. உற்சாகமாக போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கரூர் மாவட்ட தட தடகள சங்க செயலாளர் பெருமாள்,இணை செயலாளர் மகேந்திரன், மேலாளர் ராஜ்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி மாணவிகளை வாழ்த்தினர்.

Similar News