கனரக வாகன பழுதால்போக்குவரத்து பாதிப்பு
குமாரபாளையத்தில் கனரக வாகன பழுதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
குமாரபாளையம் சேலம் சாலை போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு வரை சுமார் 2 கி.மீ. தூரம் சாலை நடுவில் டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. குறுகிய சாலையில் டிவைடர் வைக்கபட்டதால் வாகனங்கள் ஏதும் முந்தி செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 05:00 மணியளவில், விடுமுறை நாள் என்பதால் வாகனங்கள் போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது. சேலம் சாலை பஸ் ஸ்டாண்ட் அருகே, பெரிய அளவிலான டேங்கர் லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் போக முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது போன்ற கனரக வாகனங்கள் குமாரபாளையம் நகருக்குள் வருவதை தடை செய்யவேண்டும் என்று, பா.ஜ.க. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் தலைமையில் சில நாட்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் பின்னும் எந்த அதிகாரியும் இது குறித்து கவலைப்படாமல், இது போன்ற பெரிய அளவிலான கனரக வாகனங்களை குமாரபாளையம் நகருக்குள் விட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.