ராமநாதபுரம் மின்சான் தாக்கி ஒருவர் பலி நாலாம் தேதி
திருவாடானை அருகே மின்சாரம் தாக்கி துணை சேர்மனின் கணவர் பலி தொண்டி போலீசார் விசாரணை.;
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி -புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் குப்பையன் மகன் ராஜேந்திரன் (50). இவரது மனைவி அழகுராணி தொண்டி பேரூராட்சியில் துணை சேர்மனாக உள்ளார். இந்த நிலையில் துணைச் சேர்மனின் கணவரான ராஜேந்திரன், அவரது வீட்டை விரிவாக்கம் செய்வதற்காக தற்சமயம் கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக வீட்டின் முன்பு உள்ள கம்பி கேட் கதவில் மின் கசிவு ஏற்பட்டு அந்தக் கதவில் மின்சாரம் பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை அறியாத ராஜேந்திரன் அதிகாலை நேரத்தில் அந்த கம்பி கேட்டை திறந்தபோது திடீரென அவரது உடலில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தொண்டி போலீசார் மின்சாரம் தாக்கி இறந்த ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிணக் கூறாய்விற்கு பிறகு ராஜேந்திரனின் உடல் உறவினர்களிடம் மாலை ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தொண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.