ராமநாதபுரம் பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
ராமநாதபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியன் அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.;
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள வடக்கு புதுத்தெருவில் அருள் பாலித்து வரும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது, கடந்த இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று, இன்று கடம் புறப்பாடு நடைபெற்று வேத விற்பனர்கள் திரு நன்னீர் குடங்களை கோபுர கலசங்களுக்கு எடுத்துச் செல்லும் போது கருடன் வட்டமிட்டு, வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றது ராமநாதபுரத்தில் முதன்முறையாக பக்தர்களுக்கு புனித நீர் ட்ரோன் மூலமாக தெளிக்கப்பட்டது, இதனை பார்த்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை வடக்கு புதுத்தெரு ஆலய விழா கமிட்டி அவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்