கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.ஐ.ஆர் படிவங்கள் திருத்த சிறப்பு முகாம்
கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி நேரில் ஆய்வு;
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் 136 (தனி) சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீடு படி வங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கட்டளை,மாயனூர்,திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம்,மகாதானபுரம், பழையஜெயங்கொண்டம்,முனையனூர், சேங்கல் உள்ளிட்ட அனைத்து வாக்கு சாவடி மையங்களில் நடைபெற்றது. அதனை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி,தொகுதி பார்வையாளர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு எஸ்.ஐ.ஆர் கணக்கீடு படிவங்கள், வாக்காளரிடம் கொடுத்த அனைத்து படிவங்களையும் வாக்காளர் இடமிருந்து விடுபடாமல் பெற்று விரைவாக பதிவேற்றம் செய்யுமாறு அலுவலர்களிடம் கூறினார்