ராமநாதபுரம் தர்காவில் கந்தூரி திருவிழா நடைபெற்றது

வாணி கிராமத்தில் செய்யது ஹாதி ஒலியுல்லா தர்காவில் கந்தூரி கறி விருந்து விழா ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு;

Update: 2025-12-01 11:38 GMT
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வாணி கிராமத்தில் அமைந்துள்ளது செய்யது ஹாதி ஒலியுல்லா தர்கா இங்கு பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இஸ்லாமிய பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பின்பும் நேர்த்திக்கடன் நிறைவேற வேண்டியும் கிடாய்கள் வெட்டி பொதுமக்களுக்கு கூட்டு கறி விருந்து அன்னதானம் வழங்குவது வழக்கம் இதன் அடிப்படையில் நேற்று வாணி கிராமத்தைச் சார்ந்த முகம்மது ஜஹார்தீன் குடும்பத்தின் சார்பில் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக செய்யது ஹாதி ஒலியுல்லா தர்காவில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது அதன் பின்பு கிடா வெட்டி சிறப்பு சமையல் நடைபெற்று பட்டச் சோரில் கறி விருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை வாணி ஜமாத் தலைவர் ஜாகிர் உசேன், அசன் கனி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர் பல்வேறு கிராமங்களைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து கந்தூரி விழாவை சிறப்பு செய்தனர்

Similar News