துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வழுதிகை நா. செல்வசேகரன் பங்கேற்று சிறப்பித்தார்.;

Update: 2025-12-01 11:46 GMT
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் ஊராட்சி பெரவள்ளூர் கிராமத்தில் தமிழக துணை முதல்வரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஆலோசனையின்படி நடைபெற்றது. நிகழ்ச்சியினை பெரவள்ளூர் திமுக கிளைக் கழக செயலாளர் எம்.செந்தில்குமார் ஏற்பாடு செய்திருந்தார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கதிரவன் முன்னிலை வகிக்தார், இதில் சிறப்பு அழைப்பாளராக சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வழுதிகை நா. செல்வசேகரன் கலந்து கொண்டு கழக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார் இதில் கழக நிர்வாகிகள் மகேஷ்,ராஜ் குமார், சீனிவாசன், ராஜா,புத்தர் சீலன், பரமசிவம் உள்ளிட் திரளான கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Similar News