மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.தா;

Update: 2025-12-01 15:02 GMT
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தர்ராஜ பெருமாள், அருள்மிகு பஞ்சமுக மகாவீரா ஆஞ்சநேயர் திருக்கோவில் புனராவர்த்தன மகா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தகுடங்கள் எடுத்து வரப்பட்டு இரண்டு நாட்களாக யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 06:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திண்டுக்கல் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள், திருவண்ணாமலை கருடானந்தா மகராஜ் சரஸ்வதி சுவாமிகள், ஈரோடு ஸ்ரீ விஜய சுவாமிஜி, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி உள்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். டி.எஸ்.பி. கிருஷ்ணன், கவுதம், இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். சிவாய நமஹா, கோவிந்தா என சரண கோஷங்கள் எழுப்பினர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கபட்டது. கும்பாபிஷேக தீர்த்தம் ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Similar News