சேவை செய்யும் மகளிர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

சேவை செய்யும் மகளிர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நம் பாரத சேவை தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தது.;

Update: 2025-12-01 16:32 GMT
சேவை செய்யும் மகளிர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நம் பாரத சேவை அமைப்பின் சார்பில் நிறுவனர் பாலசரவணன் தலைமையில் நடந்தது. ரத்த தேவைக்கு உதவுதல், உடல் உறுப்பு தானம் பெற வைத்தல், கண் தானம் செய்தல், ஆதார், ரேசன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல், பெயர் திருத்தம் செய்ய உதவுதல், மருத்துவ காப்பீடு மூலம் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய உதவுதல், வடிகால் பராமரிப்பு சாலை வசதி மேம்படுத்துதல், பேருந்துகள் இல்லாத பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்து வரும் குமாரபாளையம் சமூக ஆர்வலர்கள் சித்ரா, மல்லிகா சேவையை பாராட்டி திரைப்பட காமெடி நடிகர் தாமு, போலீஸ் ஐ.பி.எஸ்.ராமசுப்ரமணி உள்ளிட்ட பலர் விருது வழங்கி, தங்கப்பதக்கம் மற்றும் சால்வை அணிவித்து பாராட்டி பேசினார்கள்.மேலும் மதுரை,பாண்டிச்சேரி, தருமபுரி,கோயம்புத்தூர், ஈரோடு,சேலம், நாமக்கல், சென்னை பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

Similar News