வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம்.

ஆரணி கொசப்பாளையம், ஸ்ரீ பாலகுஜாம்பிகா சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2025-12-01 18:09 GMT
ஆரணி கொசப்பாளையம், ஸ்ரீ பாலகுஜாம்பிகா சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் விக்னேஷ்வர பூஜை, யஜமானர் சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரக மகம், தன பூஜை, கோபூஜை, மூர்த்தி ஹோமம், அங்குரார்ப்பணம், சாந்தி ஹோமம், யாக சாலை அலங்காரம், யாக கால பூஜைகள், நாடீஸந்தானம், பூர்ணாஹூதி, தீபாாரதனை பிரசாதம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று அனைத்து விமானங்கள், ராஜகோபுரத்திற்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திமுக தரப்பில் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன், நகரமன்றதலைவர் ஏ.சி.மணி, மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி, ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்,எஸ்.அன்பழகன், நகரசெயலாளர் மணிமாறன், ஒன்றியசெயலாளர்கள் சுந்தர், துரைமாமது, மோகன், அதிமுக தரப்பில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன், நகரசெயலாளர் அசோக்குமார், நகரமன்றஉறுப்பினர் சதீஷ், வட்டச்செயலாளர் ஏ.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் ச.சரவணசிவாச்சாரியார், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மணிகண்டபிரபு, ச.சிவஸ்கந்தசிவாச்சாரியார், அறங்காவலர் குழுத்தலைவர் பா.சங்கர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.

Similar News