திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்ட நிலையில் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல வீடுகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கன மழை பல பகுதிகளில் நீர் சூழ்ந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது;

Update: 2025-12-02 12:56 GMT
பொன்னேரி மீஞ்சூர் சோழவரம் தட பெரும் பாக்கம் பிரளயம் பாக்கம் நாளூர் மீஞ்சூர் கல்பட்டு பகுதிகளின் மழை நீர் வீடுகளை சூழ்ந்து பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதி. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்ட நிலையில் மிக அதிக கன மழையாக 20.6 சென்டிமீட்டர் மழையானது பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்தது இதனிடையே இரண்டாவது நாளாக இன்றும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது இதனால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் சோழவரம் காரனோடை ஞாயிறு சீமாபுரம் மேலூர் அத்திப்பட்டு நந்தியம்பாக்கம் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது மேலும் தடபெரும்பாக்கம், மேட்டுப்பாளையம், பிரளயம் பாக்கம் அனுப்பம்பட்டு, நாளூர், கேசவபுரம், கல்பட்டு மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரா னது வீடுகளை சூழ்ந்த நிலையில் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர் அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டை விட்டு வெளியே வர மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் தண்ணீரை முறையாக வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடுகளில் சிக்கி உள்ளவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் உணவு உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் பாதுகாப்பாக தங்குமிடங்களில் தங்க வைப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News