எஸ்.ஐ.ஆர். ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் சார்பில் எஸ்.ஐ.ஆர். சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2025-12-02 16:08 GMT
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் சார்பில் எஸ்.ஐ.ஆர். ஆலோசனை கூட்டம் நகராட்சி நடராஜா திருமண மண்டபத்தில் தாசில்தார் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில் 279 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மற்றும் அனைத்து கட்சியைச் சேர்ந்த ஓட்டுச்சாவடி முகவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் பங்கேற்று ஆலோசனை கூறினார். குமாரபாளையம் தொகுதி முழுதும் 2 லட்சத்து 61 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 90 சதவீதம் நபர்கள் வசம் எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீத பணிகள் வருகிற 11ம் தேதிக்குள் நிறைவு செய்து தர வேண்டும் என அறிவுறுத்தபட்டது. 2 லட்சத்து 61 ஆயிரம் மொத்த வாக்காளர்களில், இறந்தவர்கள் 15 ஆயிரம் பேர்கள், இடமாற்றம் செய்தவர்கள் 18 ஆயிரம் பேர் உள்பட 44 ஆயிரம் பேர்கள் நீக்கல் பட்டியலில் உள்ளனர். இவர்கள் குறித்து, பூத் முகவர்கள் வசம் கேட்டறிந்து, சரியான தகவல் பெற்று, அவர்களை மட்டும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்கள் கேட்டால், இதற்கு பதில் சொல்லக் கூடியவர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மட்டும்தான். வேறு எந்த அதிகாரியும் பொறுப்பு ஆக மாட்டார்கள். என அறிவிக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர். பணிகள் 100 சதவீதம் நிறைவு செய்த 62 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் ரமேஷ், ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன், தியாகராஜன், தேவராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News