நகர மன்ற சிறப்பு கூட்டம்
குமாரபாளையத்தில் நகர மன்ற சிறப்பு கூட்டம் நடந்தது.;
குமாரபாளையம் நகர மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு: கதிரவன் (தி.மு.க.): வடிகால் பணி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜேம்ஸ் (தி.மு..க.): எங்கள் வார்டில் குப்பைகள் அகற்ற வேண்டும். துணை சேர்மன் வெங்கடேஷ், வேல்முருகன், கிருஷ்ணவேணி, சித்ரா, உள்பட பலரும் தங்கள் வார்டுகளில் குப்பைகள் அள்ளவும், வடிகால் தூய்மை படுத்தவும் ஆட்கள் வருவது இல்லை. இவ்வாறு இருந்தால், எப்படி நாளை வார்டுக்குள் சென்று ஓட்டு கேட்பது? என கேட்டனர். வார்டு பொதுமக்கள் எங்களிடம் கேட்டு சலித்து விட்டனர். அவர்களாக நகராட்சி அலுவலகம் வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக கூறினார்கள். அவ்வாறு செய்தபின், பணிகள் செய்யபட்டால், வார்டில் எங்களுக்கு என்ன மரியாதை இருக்கும். எனவும் கேட்டனர். தி.மு.க. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், சுகாதார அலுவலர் சந்தானகிருஷ்ணனை அழைத்து, அனைத்து வார்டு மேஸ்திரிகள் கூட்டம் ஏற்பாடு செய்யுங்கள், என்றார். நியமன உறுப்பினர் பிரபாகரனை நியமனம் செய்தது, தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் குறித்த ஏற்பாடு உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.