கடந்த இரண்டு தினங்களாக பெய்யும் பலத்த மழையால் மீஞ்சூர் மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவஸ்தை.
அரசு பள்ளியோ தனியார் சத்திரமோ எதிலும் எங்களை தங்க வைக்கவில்லை என புலம்பும் நரிக்குறவர் பெண்கள்.;
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக டிட்வா புயல் காரணமாக தொடர்ந்து பெய்த பெய்து கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. டித்வா புயல் வலுவிழந்த நிலையில் தற்பொழுது குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மீஞ்சூர் அரியன் வாயில் பகுதியில் உள்ள கல்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலணியில் வெள்ள நீர் புகுந்து அந்தப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மக்களின் இயல்பு நிலையை பாதிப்பு அடைய செய்துள்ளது. இவர்களின் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் இரவில் தங்குவதற்கு இடமில்லாமல் அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் புகுந்த நிலையில் அந்த கடையின் உரிமையாளர்கள் இவர்களை அங்கிருந்து துரத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர். கடந்த முறை எங்களுக்கு இதுபோல் நிலைமை வந்தபோது தனியார் திருமண மண்டபம் ஒதுக்கப்பட்டது சிலர் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை அதை யாரும் செய்யவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் இரவு முழுவதும் உறங்காமல் நாங்கள் இந்த கடைகளின் வாசல்களில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம் என்று தங்களின் வேதனைகளை இந்த நரிக்குறவர் பெண்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே இவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்த இடத்தை மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் பள்ளிகளில் தஞதங்க வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவிக்கிறார். பல வருடங்களாக இதேபோல சூழலில் நாங்கள் வாழ்கிறோம் இந்த பகுதியில் வெளிவட்ட சாலை வேலை நடப்பதால் தண்ணீர் போகும் வழியை முழுவதும் அவர்கள் அடைத்ததால் எங்கள் பகுதியில் அனைத்து இடத்திலிருந்து வரும் தண்ணீர் தேங்கி நிற்பதால் தண்ணீர் வெளியேறுவதற்கு வழித்தடம் இல்லாமல் நாங்கள் ஒவ்வொரு வருடமும் சிரமப்படுகிறோம் என்று தெரிவிக்கின்றனர் இந்த நரிக்குறவர் மக்கள்.