கும்மிடிப்பூண்டி பஜார் : துர்நாற்றத்தால் மக்கள் அவதி
*இரசாயனக் கழிவுநீரில் மிதக்கும் கும்மிடிப்பூண்டி பஜார்*;
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுநீர், தாமரை ஏரியில் விடப்பட்டதால், ஏரியின் நீர் முழுவதும் விஷமாக மாறியுள்ளது. தற்போது பெய்த தொடர் மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வரும் இந்தக் கழிவுநீர் முழுவதும் கலந்து, குடியிருப்புப் பகுதியை நோக்கிப் படையெடுத்து வந்துள்ளது. கும்மிடிப்பூண்டி பஜார் முழுவதும் இந்தக் கழிவுநீர்க் கலவையால் துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதாரம் சீர்கெட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதே நிலை தொடருவதால், இந்தக் கழிவுநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். King Tv 24×7 - செய்தியாளர் : T.K.தட்சணாமூர்த்தி குமரவேல் (Media)