கரூரில் கோவில் இனாம் நிலம் பிரச்சனைக்கு ஒருங்கிணைந்த போராட்டமே தீர்வு. அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

கரூரில் கோவில் இனாம் நிலம் பிரச்சனைக்கு ஒருங்கிணைந்த போராட்டமே தீர்வு. அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.;

Update: 2025-12-03 11:01 GMT
கரூரில் கோவில் இனாம் நிலம் பிரச்சனைக்கு ஒருங்கிணைந்த போராட்டமே தீர்வு. அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவிலில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு மன்னர்கள் காலத்திலும் ஜமீன்தார் காலத்திலும் இனாம் நிலங்கள் வழங்கப்பட்டது. இது தன்னலம் கருதாமல் கோவிலில் பணியாற்றக் கூடிய ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டதாகும். காலப்போக்கில் அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது இந்த நிலங்களுக்கு ராயத்துவாரி பட்டா தமிழக அரசு வழங்கியது. இதன் அடிப்படையில் அந்த நிலங்கள் காலப்போக்கில் பல பரிவர்த்தனைகள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது. அவ்வாறு பத்திர பதிவு செய்யப்பட்டு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட நபர்கள் தற்போதும் அந்த பகுதியில் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இனாம் நிலம் தொடர்பாக இதே நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் நில உடமைதாரர்களிடம் நீதிமன்றம் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் கோவிலுக்கு சொந்தமான நிலம் எனக் கூறி நில உடமை தாரர்களின் சொத்துக்களை சீல் வைப்பதும் ஜப்தி செய்வதும் அண்மைக்காலமாக தொடர் கதையாகி வருகிறது. கரூரில் வெண்ணை மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் என கூறி இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தது. இதற்கு நில உடமை தாரர்களும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் ஜப்தி செய்ய வரும் அதிகாரிகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதன் அடிப்படையில் இன்று வெண்ணைமலை பகுதியில் அனைத்து கட்சி சார்பாக ஆலோசனைக் கூட்டம் முன்னாள் கிராம நிர்வாக அலுவல அலுவலர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தண்டபாணி,நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை அணியின் மாநில செயலாளர் நன்மாறன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ராஜா,சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கருணா மூர்த்தி, திமுக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத்,கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட நில உடமைதாரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மேற்கொண்ட முடிவுகளின்படி நீதிமன்றத்தின் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் அடாவடி செயல்களில் ஈடுபட்டு சீல் வைப்பது ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என வலியுறுத்த நாளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களை சந்தித்து மனு அளித்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென ஏக மனதாக தீர்மானித்தனர். இந்த கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர் நன்மாறன் பாதிக்கப்பட்ட நில உடமைதாரர்கள் ஒருங்கிணைந்து போராடினால் தான் இனாம் நில பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தார்.

Similar News