ரிஷிவந்தியம், தமிழ்நாடு துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு சாலையோர வியாபாரிக்கு குடை வழங்கிய எம்எல்ஏ
தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரிஷிவந்தியம் பகுதியில் சாலையோர வியாபாரிக்கு குடை வழங்கிய ரிஷிவந்தியம் எம்எல்ஏ;
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ... கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்கள், இன்று தனது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மணலூர்பேட்டை பேரூர் கழக இளைஞரணி சார்பில்,சாலையோரம் சிறு வியாபாரம் செய்யும் 50 -க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு தொடர் மழை காரணமாக, வியாபாரிகளையும் மற்றும் அவர்களின் வியாபார பொருட்களையும் பாதுகாக்கும் விதமாக பெரிய குடைகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட, ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், என அனைவரும் உடன் இருந்தனர்.