டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நரிக்குறவ பொது மக்களுக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று அடிப்படை வசதிகள் ஏற்பாடு
கல்பாக்கம் கிராமத்தில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இருக்கிறதா என பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்.;
பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம்கல்பாக்கம் கிராமத்தில் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள்.பொதுமக்கள் அருகிலுள்ள பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு போதிய வசதி பெறும் வகையில் ஏற்பாடு செய்து, குடிநீர், உணவு, மருத்துவ வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டுள்ளதையும், அவை முறையாக செயல்படுவதாகவும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .