பூவலையில் ஒண்டிக் கிடக்கும் இருளர் இன மக்கள் :-
பாதுகாப்பை உறுதிசெய்ய சிபிஎம் வலியுறுத்தல்.;
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த பூவலை ஊராட்சியில் இருளர் இனத்தைச் சேர்ந்த 45 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் 20 குடும்பங்கள் குடிசைகளில் வசித்து வந்த நிலையில், கனமழையால் குடிசைகள் விழுந்துள்ளன. விழுந்த இடத்திலேயே குடும்பத்துடன் ஒண்டிக் கொண்டு வசிக்கின்றனர். மேலும் 25 தொகுப்பு வீடுகளில் உள்ளவர்கள் ஓரளவிற்கு பாதுகாப்பாக உள்ளனர். எனினும் தொடர் மழையால் வருவாய் ஏதுமின்றி தவிக்கின்றனர்.ஆரம்பாக்கம் ஜீவா நகர், வழுதலம்பேடு கரையோரம் குடிசையில் குடியிருக்கும் தலித் மக்கள், கும்மிடிப்பூண்டி நகர் பேருந்து நிலையம் பின்புறம் வசிக்கும் நரிக்குறவர்கள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, உணவு, பாது காக்கப்பட்ட குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை அதிகாரிகள் செய்ய வேண்டும் என சிபிஎம் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், விவசாயிகள் சங்கத்தின் வட்டத் தலைவர் சி.முனிரத்தினம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். T.K.தட்சணாமூர்த்தி குமரவேல் ( King Tv 24×7 Reporter )