விவசாயிகளை வாழ வைக்கும் வாழைத்தோட்டத்திற்கும் வேட்டுவைத்த டிட்வா புயல் மழை
கனமழையின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான விளைநிலங்கள்;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை மாதர் பக்கம் பாதிரிவேடு ஆரம்பாக்கம் எலாவூர் ஆரணி பெரியபாளையம் என இன்றும் மழை தொடர்ந்து விட்டுவிட்டு பெய்து வருகிறது இதில் கவரப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் எலாவூர் பகுதிகளிலும் அதிக அளவு தோட்டக்கலை பயிர்களை வைத்து விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர் இங்கு பயிரிடப்படும் வாழை மரம் கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு விருந்து பரிமாற பயன்படுத்தப்படும் வாழை இலை விற்பனை நம்பி விவசாயிகள் அதிக அளவு பயிரிடுகின்றனர் தற்போது பெய்த மழையால் வயல்களில் ஏறி குளம் போல் தண்ணீர் தேங்கி நின்று வாழை தோட்டங்கள் அதிக அளவு ஏக்கர் கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளது தண்ணீரில் வாழைமரம் முழுகி உள்ளதால் அதில் உள்ள இலைகளை கூட அறுத்து வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் வேர் அழுகி முற்றிலும் வாழைத்தோட்டம் சேதமாகும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்