ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் நினைவு நாள் அலங்கரிக்கப்பட்ட திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வீரவணக்கம்...

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் நினைவு நாள் அலங்கரிக்கப்பட்ட திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வீரவணக்கம்...;

Update: 2025-12-07 14:21 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன், அவர்களின் ஆணைக்கிணங்க அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அம்பேத்கரின் 69ஆவது நினைவு நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட விசிக செயலாளர் மும்பை அர்ஜுன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் மௌன அஞ்சலி செலுத்தி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து நான்காவது வார்டு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டணம் பகுதியில் அலங்கரிக்கப்பட்டு வைத்துள்ள புகைப்படத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தி காக்காவேரி பகுதியில் உள்ள அம்பேத்கர் திருவுரு சிலைக்கு வீரவணக்கம் செலுத்தி தலித் இஸ்லாமிய ஒற்றுமை எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அருணாச்சலம் மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வ நிலவன், குமாரசாமி, செங்கதிர் , ஒன்றிய செயலாளர்கள் ராமன் ,கோபி ,,உள்ளிட்ட நகரப் பொறுப்பாளர்கள் பூபதி ,சங்கர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News