ராசிபுரத்தில் எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்...
ராசிபுரத்தில் எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்...;
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., முன்னிலையில் பிற கட்சிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். வெண்ணந்தூர் ஒன்றியம் நெ.3 கொமாரபாளையம் வசந்தம் நகர், அதிமுக கிளைச்செயலாளர் ரங்கநாதன் தலைமையில் 27 பேர் அக்கட்சியிலிருந்து விலகி தங்களை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இதே போல் கட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்.விஜி தலைமையில் 10 பேர் அதிலிருந்து விலகி கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., முன்னிலையில் திமுகவில் இணைத்துக்கொண்டனர். வெண்ணந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எம். துரைசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிளைச் செயலாளர் நல்லதம்பி, திமுக மாவட்ட பிரதிநிதி ஹரிதேவன், சுசீந்திரன், மாணிக்கம், ஜம்பு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் திட்டங்களால் கவரப்பட்டு திமுகவில் இவர்கள் இணைந்துள்ளனனர். இது போன்று மேலும் தொடர்ந்து பிற கட்சியில் இருந்து வருவார்கள் என கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் இதற்கான நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார்.