விவசாயி பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை.

ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயி ராதாகிருஷ்ணன்;

Update: 2025-12-07 16:59 GMT
ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தன்னுடைய நிலத்தை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வரதகவுண்டர் மகன் விவசாயி ராதாகிரு~;ணன் என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரின் குடும்ப சொத்தான ஆரணி- வேலூர் நெடுஞ்சாலையில் புதுப்பாளையம் கூட்ரோடு அருகில் 0.80சென்ட் விவசாய நிலம் உள்ளது. இதில் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கண்ணன் என்பவருக்கு 70 சென்ட் நிலத்தை அடமானம் வைத்துள்ளதாக தெரிகிறது. மீதமுள்ள 10சென்ட் நிலத்தை நிலமும் கண்ணனின் மாமியார் மணிமேகலைக்கு கடந்த 2017ம் ஆண்டு கிரையமாக ராதாகிரு~;ணன் விற்பனை செய்துள்ளார். மேலும் பின்னர் கண்ணன் மற்றும் மணிமேகலைக்கு குறைவான விலையில் நிலத்தை விற்றுள்ளதாகவும் இதனால் இருதரப்பினருக்கும் 8ஆண்டுகளாக மோதல் ஏற்பட்டு ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டு நிலுவையில் உள்ளன.இந்நிலையில் மணிமேகலை, அவரது கணவர் மாசிலாமணி, மகன் அஜித் ஆகியோர் நிலத்திற்கு சென்று டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தனர். அப்போது விவசாயி ராதாகிருஷ்ணன், மாசிலமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரமடைந்த விவசாயி ராதாகிருஷ்ணன் தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் தீ உடல் முழுவதும் பரவியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு இறந்தார். இது குறித்து கண்ணமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News