வந்தவாசி தனி தொகுதியில் பாஜக போட்டியிட விருப்பம்.
இந்த தொகுதியில் பாஜக கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறது. அவ்வாறு பாஜகவுக்கு சீட்டு ஒதுக்கினால் பாஜக கட்சியில் மாவட்டச் செயலாளராக உள்ள ராஜமண்சிங், ஒன்றிய பொதுச் செயலாளர் இராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளது.;
ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்ற தொகுதி தனித்தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் பாஜக கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறது. அவ்வாறு பாஜகவுக்கு சீட்டு ஒதுக்கினால் பாஜக கட்சியில் மாவட்டச் செயலாளராக உள்ள ராஜமண்சிங், ஒன்றிய பொதுச் செயலாளர் இராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளது. இதில் ராஜமண்சிங் என்பவர் காங்கிரஸ் கட்சி குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் மூன்று பருவங்களாக மாவட்ட அமைப்பு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தாழ்த்தப்பட்ட மக்களிடையே நல்ல மதிப்பு உள்ளது மேலும் அவர்கள் உதவி என கேட்டால் உடனடியாக செய்து தருவார். மேலும் கமலாயத்தில் செல்வாக்கு அதிகம் உள்ளவர். ஆகையால் ராஜாமண்சிங்கிற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் தெள்ளார் ஒன்றிய பொதுச் செயலாளராக உள்ள இராமச்சந்திரனும் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார். இவர் விவசாயிகளுக்கு அறிமுகமானவர். இவரது மனைவி ஊராட்சி செயலாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் மத்திய அரசால் வழங்கப்பட்ட நல திட்ட உதவிகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி பெற்றுக் கொடுத்தவர். மேலும் ஒன்றிய தலைவர் முருகனுக்கு நெருக்கமானவர். ஆகையால் இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படச்செய்தி. இடமிருந்து வலமாக, ராஜமண்சிங், இராமச்சந்திரன்.