ராமநாதபுரம் அருகே யானை தந்தங்கள் கடத்திய மூன்று பேர் கைது

நான்கு கிலோ எடை கொண்டு யானை தந்தங்கள் பறிமுதல்மூவர் கைது மரைன் போலீசார் நடவடிக்கைஇலங்கைக்கு கடத்த கொண்டுவரப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது;

Update: 2025-12-08 05:00 GMT
ராமநாதபுரம் மாவட்டம்கீழக்கரை அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு கிலோ யானை தந்தங்களுடன் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்கு யானை தந்தங்கள் கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்தில் மரைன் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கீழக்கரை, ஏர்வாடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மூக்கையூர் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டுப்படகுகளில் அம்பர் (திமிங்கல எச்சம்) யானை தந்தம், ஆடு, புறா, கடல்குதிரை, சுறா துடுப்பு, உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருவதால் கடத்தல் சம்பவத்தை தடுக்க ராமநாதபுரம் மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சி ராணி ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் உள்ள மரைன் காவல் நிலையங்களில் சிறப்பு படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கீழக்கரை கடற்கரையில் இருந்து யானை தந்தம் சட்டவிரோதமான முறையில் கடத்த இருப்பதாக மரைன் ஆய்வாளர் ஜான்சி ராணிக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மரைன் போலீசார் சிவகாமிபுரம், மீனவர் குப்பம், புதுநகர் உள்ளிட்ட கீழக்கரை கடற்கரை கிராமங்களில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர் அப்போது கீழக்கரை கடற்கரை சாலை மாதா கோவில் அருகே நின்று கொண்டிருந்த தூத்துக்குடி பகுதியில் சேர்ந்த காதர் பாட்ஷா (27), சாயல்குடி பகுதியை சேர்ந்த ஹரி குமார் (29) ஆகிய இருவரை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த மரைன் போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் நான்கு கிலோ எடை கொண்ட இரண்டு யானை தந்தங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து யானை தந்தங்களை பறிமுதல் செய்த மரைன் போலீசார் இருவரையும் கீழக்கரை மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் யானை தந்தத்தை காவா குளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (26) என்பவர் விற்பனை செய்ய கொடுத்து அனுப்பியது தெரிய வந்ததையடுத்து காதர் பாட்ஷா, ஹரிகுமார், ஸ்ரீராம் ஆகிய மூவரையும் கைது செய்த மரைன் போலீசார் மேலதிக விசாரணைக்காக ராமநாதபுரம் வனச்சரக அதிகாரிகளிடம் கைது செய்த மூவரையும் யானை தந்தங்களுடன் ஒப்படைத்தனர். மரைன் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காவாகுளத்தை சேர்ந்த ஸ்ரீராம் இலங்கைக்கு கடல் வழியாக கடல் குதிரை, அம்பர் (திமிங்கல எச்சம்) யானைத் தந்தம், புறா, கிளி, சுறா துடுப்பு உள்ளிட்ட பொருட்களை இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திய வழக்குகளில் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தது பெரிய வந்ததால் நான்கு கிலோ எடை கொண்ட இரண்டு யானை தந்தங்களும் இலங்கைக்கு கடத்துவதற்காக கூழக்கரை கடற்கரைக்கு கொண்டு வந்த போது பிடிப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மரைன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கிலோ கடை கொண்ட யானை தந்தத்தின் மதிப்பு ரூபாய் ஒரு கோடி இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News