ராமநாதபுரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமேஸ்வரம் கடலில் தவறி விழுந்த மீனவரை கண்டுபிடித்து தரக்கோரி சக மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்று நடுக்கடலில் தவறி விழுந்து மாயாமான மீனவரை மீட்டு தரக்கோரி ராமேஸ்வரம் மீன்வளத்துறை அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன்பு அமர்ந்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை காலை மீன்பிடிக்க சென்ற மீனவர் ஆரோக்கிய கிங் என்பவர் நடுக்கடலில் தவறி விழுந்து மாயமானார். தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்கும் பணியில் நேற்று இரண்டாவது நாளாக இந்திய கடலோர காவல் படை மற்றும் சக மீனவர்கள் ஈடுபட்ட நிலையில் மீனவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் கடலில் மாயமான ஆரோக்கிய கிங் உடனடியாக கண்டுபிடித்து தரக் கோரி மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்வளத்துறை மீன்பிடி அனுமதிச்சிட்டு வழங்கும் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்தும், படுத்து உருண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று மீன் பிடிக்க சொல்ல மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை. மீனவர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.