தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசை கண்டித்து சாலை மறியல்

தமிழக அரசு தேர்தல் வாக்குறுகையை நிறைவேற்ற அதை கண்டித்து புதிய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கைது;

Update: 2025-12-09 06:16 GMT
பெரம்பலூரில் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், 1993ல் பணிகள் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி முறையே ரூ. 10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும், பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் மணிமேகலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமிட்டவாறு பேருந்து நிலையம் முன்பு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை எதொடர்ந்து பாதுகாப்பு போலீசார் மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Similar News