ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி மாவட்ட நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-09 08:43 GMT
ராமநாதபுரம் மாவட்டம்நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் நீதி மன்றங்களில் இ-பைலிங் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம், தலைவர் அன்பு செழியன் தலைமை வகித்தார். செயலர் முத்துதுரைச்சாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். முத்து வழக்கறிஞர் குணசேகரன் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், ராமநாதபுரம்,ராமேசுவரம்,திருவாடானை,முதுகுளத்தூர்,கமுதி,பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

Similar News