அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

குமாரபாளையம் அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது.;

Update: 2025-12-09 16:17 GMT
குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆயிரத்து 526 எண்ணிக்கையிலான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நகரமன்றத் தலைவர், வடக்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் எம்/எல்/ஏ. மூர்த்தி பங்கேற்று, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தலைமை ஆசிரியர்கள் காந்தரூபி, ஆடலரசு வரவேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, நகர்மன்றத் துணைத் தலைவர் வெங்கடேசன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து, உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News